"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீட்டு நிகழ்வும் .



































"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின்  இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி திருமதி.சசிகலாராணி ஜெயராம் தலைமையில் நேற்று 19.02.2023  ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இடம் பெற்ற   "சதங்கை நாதாம்ருதம் - 02" நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அத்தோடு நிகழ்விற்கு கௌரவ அதிதியாக   மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இதன்போது "கலார்ப்பணம்" நூல் வெளியீடு இடம் பெற்றதுடன் "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் மாணவர்களினால் கண்கவர் நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்படவுள்ளதுடன், கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றது

இந்நிகழ்வில் "கலார்ப்பணா"  நாட்டிய நிலையத்தின் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .