பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 188 ஆவது ஜெயந்தி விழா இன்று (21) அதிகாலை தொடக்கம் பக்தி பூர்வமாக கல்லடி உப்போடையில் ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷனில் இடம்பெற்றது.
கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் மகராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மங்களாராத்தி, திருப்பள்ளியெழுச்சி, கொடியேற்றம், பூஜை, பஜனை, கோமபூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியன நடைபெற்றது.
இதேவேளை நேற்று (20) மாலை பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் உருவப்படம் தாங்கிய ரத பவனி கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, புதிய கல்முனை வீதி வழியாக கல்லடி சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியை அடைந்து, மீண்டும் விபுலானந்தா வீதி வழியாக ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷனை வந்தடைந்தது.