2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2023 ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காமை வருத்தத்திற்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீடு பணிக்காக வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவான 500 ரூபா போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விடைத்தாள் மதிப்பீடு பணிக்காக ஆசிரியர்களின் நாளாந்த
கொடுப்பனவை ரூபா 3,000 ஆக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அமைச்சரவை
அனுமதியைப் பெற்றிருந்த போதிலும், அது தொடர்பான சுற்றறிக்கை இன்னும்
வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.