முன்பள்ளியின் அதிபர் திருமதி.ரவிக்குமார் வசுமதியின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிரான் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சோ.யோகராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
இந் நிகழ்விற்கு கௌரவ அதிதியாக சிவஸ்ரீ சண்முகம் குருக்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.சிவவரதன், எஸ்.விஜயகுமார் ஆகியோர்களும் விசேட அதிதிகளாக கிரான் விவேகானந்த வித்தியாலய அதிபர் திருமதி.சுமித்திரா விஜியானந்தம், புதுக்கொலணி சிவ வித்தியாலய அதிபர் ரி.தமிழ்வாணன் பறங்கியாமடு பாரதி வித்தியாலய அதிபர் திருமதி.தெய்வமணி சிவானந்தன் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் ப.சிவராம் அகியோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது ஆங்கிலம் தமிழ் சிங்கள பாடல்களுக்கான நடனம், நாட்டார் பாடல், குலேபா நடனம், கும்மி நடனம், காவடி நடனம், ஆங்கில கவிதை என மாணவர்களின் பல்வேறு கலை கலாச்சார நாட்டிய நிகழ்வுகள் அரங்கில் நடைபெற்றன.
தொடர்ந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தரம் 1 ற்கு செல்லும் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றம் பிரதேசத்தில் பல்வேறுபட்