தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை - 2023










மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . கலாமதி பத்மராஜா அவர்களின்  ஆலோசனைக்கு அமைவாக, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி  முகுந்தனின் (காணி)  வழிகாட்டலின் கீழ்  மாவட்ட மகளிர்  அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருணாளினி சந்திரசேகரன் அவர்களின் ஏற்பாட்டில்  மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் இன்று (23) திகதி இடம் பெற்றது .

 நாடளவிய ரீதியில் இடம் பெறவுள்ள தேசிய மட்டத்தில்  சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதகான நிகழ்வுக்காக
14 பிரதேச செயலகங்களில்  இருந்து தொழில் முயற்சியாளர் தலா ஒருவர் வீதம் 14 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் மூவர் சிறந்த தொழில் முயற்சியாளராக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டு  அதிலிருந்து ஒருவருக்கு மாத்திரம் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்திகை அமைச்சினால் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது தேசிய மகளிர் தினத்தன்று  வழங்கப்படவுள்ளது.

மாவட்ட செயலகத்தில்  மகளிர்  அபிவிருத்தி பிரிவு குழுவினரால் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், 14 பிரதேச செயலகங்க பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்கள்  கலந்துகொண்டனர்.