மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
பாடசாலை மாணவர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி
பாடசாலை அதிபர் வல்லிபுரம் முருகதாஸ் தலைமையில் பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது
2023
ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகளில்
மாணவர்களின் ஓட்ட நிகழ்வுகள், உடற்பயிற்சி, வினோத விளையாட்டுக்கள்
இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்,
சான்றிதழ்களும், வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள்
சிறப்பாக நிறைவு பெற்றன.
வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வில் அதிதிகளாக
மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திர குமார் , மண்முனை
வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.பி. இரவிச்சந்திரன், மட்டக்களப்பு
வலயக்கல்வி
அலுவலக முறை சாரா கல்வி உதவி கல்வி பணிப்பாளர் தயானந்தன்,
மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர் அன்புராஜ் மற்றும் வலயக்கல்வி
அலுவலக அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.