கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் மீளவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் அணிந்திருந்த ஆடை, அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி மற்றும் இரத்த மாதிரி உள்ளிட்ட 11 வழக்கு பொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கையை பெறுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 17ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதுடன் இதில் ஹோமாகம, பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி உயிரிழந்தார்.
கொழும்பு – பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயின்ற ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டார்.