அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய கொக்கனாரை வட்டை
பகுதியில், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பதற்காக, காவலுக்குச்
சென்ற 3 பிள்ளைகளின் தந்தையொருவர், யானையின் தாக்குதலுக்கு
இலக்காகி உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வயல்
காவலுக்குச் சென்றபோதே 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க
முஹமட் அலியார் சுபையிர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி
உயிரிழந்திருந்தார்
சம்மாந்துறைப் பகுதியில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.