சம்மாந்துறை பிரதேசத்தில் அறுவடை இடம்பெறும் நிலையில் மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழையும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் இன்று மாலை வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இதன்போது விவசாயிகளையும் வயல் நிலங்களையும் ஊர்மக்களையும் பாதுகாப்பதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு யானைகளை காட்டுப்பகுதிக்குள் அனுப்பபுவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் குறித்த ஒரு யானையை இனங்கண்டுள்ளதாகவும் , அதனை வனவிலங்கு சரணாலயத்திற்கு இன்று ஏற்றி செல்லுவதற்கான நடைவடிக்கை எடுப்பதாகவும், விவசாய நடவடிக்கை முடியும் வரை யானைகளை வனவிலங்கு பாதுகாப்பு செயலணியும் சிவில் பாதுகாப்பு படையும் இணைந்து விவசாயிகளின் பாதுகாப்பை வயல் நிலப் பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனுடன் நீண்டகால பாதுகாப்பு திட்டதினையும் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.