முன்னாள் 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி

 


 முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய 4 ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் தொடர்ந்து பெருந்தொகையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி  வருகிறது . இவர்களோடு மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசாவும் இந்த நிதியை பெறுகிறார்.

 அந்த வகையில் 2023 ஆம் ஆண்டும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 2022 இலங்கைப் பிரஜைகளுக்கு பொருளாதாரப் பேரழிவைக் கொண்டு வந்துள்ளதால் திறைசேரி 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை தன்னால் இயன்ற அனைத்து வகைகளிலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனினும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை தெளிவுபடுத்தும் வகையில் திறைசேரியால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, கடந்த 2023ஆம் ஆண்டுகளை போலவே எந்தவித குறைவும் இன்றி அரச தலைவர்களுக்காக மில்லியன் கணக்கான தொகைகள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாகஅரச தலைவர்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளன .