பேரூந்தில் 40 வயது பெண் மீது பாலியல் சேட்டை 26 வயது நபர் கைது

 


 குருநாகல் நோக்கி நேற்றையதினம் 15ஆம் திகதி பயணித்த பேருந்தில் நாற்பது வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்து வருகிறார். 

 குறித்த பெண் பாலியல் சேட்டைக்கு உட்படுத்தப்பட்டதாக பொத்துஹெர காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, காவல்துறை குழுவொன்று மல்பிட்டிய பிரதேசத்தில் பேருந்தை நிறுத்தி சந்தேகத்திற்குரிய கடற்படை வீரரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் பெண் காவல்துறையினரிடம் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.