((கனகராசா சரவணன்)
ஜ.டி.எம். தனியார் பல்கலைக்கழக 49 ஆண்டு விழா மட்டக்களப்பு ஈஸ் லகுன் ஹொட்டலில் நிறுவனத்தின் 2022 ஆண்டுக்கான சிறந்த
ஊழியர்க்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை
இடம்பெற்றது
இன் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நிறுவன
முகாமைத்துவ பணிப்பாளர் திரு மகேஸ்வரன் மணிமாறன் ஜ.டி.எம். பல்கலைக்கழக
துணை தலைவர் ஸ்டிவ், அதிதிகளாக கொழும்பு வளாக பிரதம நிறைவேற்று அதிகாரி
திருமதி அமைந்தி குலத்திலாக மற்றும் கிழக்கு வளாக பணிப்பாளர் திரு
தேசிங்கு சசிகுமார் மட்டக்களப்பு, கல்முனை வளாக முகாமையாளர்கள் கலந்து
கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கங்கள் அரச,
தனியார் துறை அதிகாரிகள் ஆசீரியர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் கலந்து
கொண்டதுடன இதில் அதிதிகள் மங்களவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து நிறுவனத்தின்
49 வது ஆண்டு நிறைவையிட்டு கேக் வெட்டி கொண்டாடியதுடன்
நிறுவனத்தின்
2022 ஆண்டுக்கான சிறந்த முறையில் முன்னேறிவரும் சந்தைப்படுத்தினருக்கான
விருது மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதை இ. கிருஷhந், சிறந்த ஆங்கில
விரிவுரையாளருக்கான விருதை செல்வி க. நிஷhவதனி, சிறந்த ஊழியர்க்கான விருதை
ஜதீஸ் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.