619 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

 



75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும், தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.