75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

 


 மட்டக்களப்பு மாவட்டச் செயலக சுற்றுச்சூழலில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
சூழல் நேய பசுமை வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டச் செயலக சுற்றுச்சூழல், நகர் பகுதி மற்றும் வாவிக்கரையோரங்களில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
சிரமதானப் பணியில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், இராணுவ படைவீரர்கள், மாநகர சபை ஊழியர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணியாளர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.