கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் 75வது தேசிய சுதந்திர தின விழா!!
பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளரினால் தேசியக் கோடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தியாவட்டவான் கிராம சேவைப் பிரிவில் 49 சுய தொழில் முயற்சியாளர்களின் தொழில் மேம்பாட்டிற்கான ஊக்குவிப்பு நிதியாக தலா 20,000/= வீதம் 10 தவணைகளுக்கு கிராம சக்தி மக்கள் அமைப்பின் கீழ் வட்டியில்லாக் கடனாக வழங்கப்பட்டது.
அத்துடன் தியாவட்டவான் கிராமசேவகர் கிராமிய புத்தெழுச்சி மையத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எம். ஏ. சி. ரமீஸா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். எம். எம். ருவைத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். எச். எம். அறபாத், சமூர்த்தி உத்தியோகத்தர் ஏ. முஹம்மத், நிருவாக உத்தியோகத்தர், கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.