(கனகராசா சரவணன்)
வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள திறந்திருந்த நகைகடை ஒன்றில் இருந்து தங்க
ஆபரணங்கள் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 6 இலச்சத்து 49 ஆயிரம் ரூபா
பெறுமதியான வைகளை பகலில் திருடிச் சென்ற 25 இளைஞன் ஒருவரை ஒரோ நாளில் 8
மணித்தியாலயத்தில் மாலையில் கைது செய்துள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை (01)
இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார
தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள பிரதேச சபை
மைதானத்துக்கு முன்னாள் உள்ள நகைக்கடைக்கு சம்பவதினமான நேற்று காலை 10
மணியளவில் கடையை உரிமையாளர் திறந்து பூயை செய்து சாம்பிராணி போட்டுக்
கொண்டிருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் சென்று உடைந்த தங்க ஆபரணத்தை
ஒட்டித்தருமாறு கோரியுள்ளார்.
இதனையடுத்து கடை திறந்த நிலையில்
அருகிலுள்ள தங்க நகை ஒட்டும் கடைக்கு வாடிக்கையாளருடன் சென்று சுமார் 10
நிமிட இடைவெளியில் இதனை வீதியில் நின்று அவதானித்துக் கொண்டிருந்த திருடன்
கடைக்குள் புகுந்து அங்கிருந்த 24 கிராம் 350 மில்லிகிராம் தங்க
ஆபரணங்களையும் 2 இலச்சத்து 10 ஆயிரம் ரூபா பணம் 3 கையடக்க தொலைபேசிகளை
திருடிச்சென்றுள்ளான்
இதனையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்த
நிலையில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ்கொஸ்தாப்பர்
வை.தினேஸ்க்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு
பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் அல்போட் தலைமையிலான பொலிஸ் குழுவினர்
வாழைச்சேனை உசேன் வைத்தியர் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை சுமார் 8
மணித்தியாலயத்தில் மாலை 6 மணிக்கு கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க
ஆபரணங்கள், பணம், 2 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளனர்.
இதல் கைது
செய்யப்பட்டவர் பிரதேசத்தில் நீண்ட காலமாக பல வீடடைப்பு கொள்ளை
சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில்
ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.