சந்தையில் கிடைக்கும் விலைக்கு ஏற்ப 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால், முன்பதிவு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 2024 வரை நாட்டுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு நிறுவனத்திடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிறுவனம் செயற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.