மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு ஏரோபிக் (Aerobic) நடன உடற்பயிற்சி!!

 








மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஶ்ரீகாந்த் அவர்களின் எற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வெபர் மைதான உள்ளக அரங்கில் ஏரோபிக் நடன உடற்பயிற்சி நேற்று (09) திகதி வழங்கிவைக்கப்பட்டது.
மாவட்ட செயலக ஊழியர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி.ஜனார்தனி நரசிம்மன் ஒழுங்குபடுத்தலின் கீழ் ஏரோபிக் நடன உடற்பயிற்சியை கராத்தே மற்றும் ஏரோபிக் பயிற்றுவிப்பாளர் திருமதி.ஆர்.முருகேந்திரன் வழங்கினார்.
உடல் உள ஆரோக்கியத்தின் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கும் நாட்டுக்கும் வழங்க முடிவதுடன் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.
இப்பயிற்சி நெறியில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மிகவும் உற்சாகமாக பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,