நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளுக்கே அச்சமடைகிறோம்.

 


 

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் தேர்தலுக்கு அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளுக்கே அச்சமடைகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தேர்தலுக்காக நிதி அச்சிட்டால் பணவீக்கம் மீண்டும் உயர்வடைந்து இலங்கையில் நெருக்கடிகள் மேலும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் நாணயத்தை அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.