பைபிளில் கூறப்பட்டதைப் பின்பற்றி 40 நாட்கள் உணவுத்தவிர்ப்பை மேற்கொள்ள முயன்ற மொசாம்பிக்கின் போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாண்டா ட்ரிண்டேட் எவாஞ்சலிகல் தேவாலயத்தின் நிறுவனர் பிரான்சிஸ்கோ பராஜா என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல், அவரால் எழுந்து நிற்க முடியாத அளவுக்கு உடல் எடை குறைந்தது.
இதனையடுத்து உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் பராஜா கடுமையான இரத்த சோகை மற்றும் அவரது செரிமான உறுப்புகளின் செயலிழப்புகளுக்கு உள்ளானமை அங்கு கண்டறியப்பட்டது.
திரவ உணவுகளை அவருக்கு வழங்க முயற்சிக்கப்பட்டபோதும் அவர் இறுதியில் மரணமானார்.
சாண்டா ட்ரிண்டேட் தேவாலயத்தின் உறுப்பினர்கள், போதகரும் அவரைப் பின்பற்றுபவர்களும் உணவுத்தவிரப்பில ஈடுபடுவது பொதுவானது, ஆனால் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்படுவதில்லை என்று தேவாலயத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
மத்தேயு நற்செய்தியில் விபரிக்கப்பட்டுள்ளபடி, பாலைவனத்தில் கிறிஸ்துவின் 40 நாள் உணவுத்தவிர்ப்பை பின்பற்றுவதற்கான இத்தகைய முயற்சி இது முதல் தடவையாக மேற்கொள்ளப்படவில்லை.
2015 ஆம் ஆண்டில், சிபாப்வேயைச் சேர்ந்த ஒருவர் 30 நாட்களுக்குப் பிறகு இறந்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
2006 ஆம் ஆண்டில், லண்டனில் இதேபோன்ற உணவுத்தவிர்ப்பின்போது ஒரு பெண் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது