திரப்பனையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய வேட்பாளர் ஒருவர் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்தவேளை திரப்பனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரப்பனை, உத்திமடுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கசிப்பு காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் காவற்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த பகுதியில் உள்ள காணியில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.