பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர், தமது கைத்துப்பாக்கியால், தம்மைத்தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த 31 வயதான சிப்பாய் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.