களனிவெளி – தலவாக்கலை மற்றும் ஹொரணை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டங்களில் சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பவராக ஆர். சீதையம்மா தெரிவாகியுள்ளார்.
இதன்போது, அவருடன் இணைந்து 41 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
களனிவெளி - தலவாக்கலை மற்றும் ஹொரணை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ரதல்ல தோட்டப்பகுதியில், தேயிலை கொழுந்து செழிப்பாக வளர்ந்த பகுதியில் தேயிலை பறிக்கும் இறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.
இதன்போது, 20 நிமிடங்களில் சீதையம்மா 10 கிலோ 450 கிராம் தேயிலைக் கொழுந்தை பறித்துள்ளார்.
கடந்த 7 வருடங்களாக தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபடும் சீதையம்மா, தேயிலைப் பறிக்கும் இறுதிப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதன்படி, அவருக்கு 3 இலட்சம் ரூபாவுக்கான காசோலையும், தங்கப் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .