மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி வகைகளுக்கு
நிலவும் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்டச்
செயலகத்தின் ஏற்பாட்டில், குருதிக்கொடை முகாமொன்று நடாத்தப்பட்டது.
‘உதிரம்
கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில், மட்டக்களப்பு மாவட்டச்
செயலாளர் கலாமதி பத்மராஜாவின் தலைமையில் இடம்பெற்ற குருதிக்கொடை முகாமில்,
இராணுவத்தினர், பொலிஸார்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உறுப்பினர்கள்,
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், நிலஅளவை திணைக்களம், வலயக்கல்வி அலுவலகம்
ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு
குருதியினை வழங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜி
.எவ்; லயன்ஸ் கழக அனுசரணையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த குருதிக்கொடை
நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி
கணேசலிங்கம், லயன்ஸ் கழக சர்வதேச முன்னாள் பணிப்பாளர் லயன் எந்திரி தனபாலன்
உட்பட பலரும் குருதிக் கொடை முகாமில் இணைந்து ஆதரவளித்தமையையும் அவதானிக்க
முடிந்தது.