தேசிய கல்வி நிறுவகமும் கல்வி அமைச்சும் இணைந்து மாணவர்களின் நன்மையை கருத்தில்கொண்டு ,நூல்களின் விற்பனையும் கண்காட்சியும் நேற்று மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் வெளியில் பெற்றுக்கொள்ளும் நூல்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணம் தழுவியதாக இக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பல்வேறு பாடத்திட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு நூல்களும் ,வழிகாட்டி நூல்களும்
மூன்று
மொழிகளிலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய கல்வி நிறுவகத்தின்
அச்சு மற்றும் வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி பிரபாகரன் தலைமையில்
ஆரம்பமான நிகழ்வில் , பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்
அகிலா கனகசூரியம் கலந்துகொண்டதுடன், மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர்
சுஜாதா குலேந்திரகுமார் உட்பட தேசிய கல்வி நிறுவகஅதிகாரிகள்,
அதிபர்கள்,ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.