புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயினுடன் புத்தளம் காவல்துறையின் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் போதைப்பொருள் கையிருப்பு வைத்திருந்த நிலையில் வாங்குபவருக்காக காத்திருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
.சந்தேகநபர் ஹெரோயின் தொடர்பான வழக்கில் இதற்கு முன்னர் மூன்று தடவைகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.