உள்ளூராட்சி மன்ற தேர்தல் அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி இதுவரை வரை கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார்.
அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கு 400 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.