மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்கள்.

 


மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எல்பிட்டிய, கனேகொட, தெரங்கொட பஹல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய உஹனோவிடகே மல்லிகா என்ற திருமணமான பெண் , எல்பிட்டிய, ஓமட்டாவைச் சேர்ந்த, 80 வயதான உடுகமசூரிய ஞானவதி என்ற திருமணமாகாத பெண்ணும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

 இந்த இரு பெண்களும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.