மட்டக்களப்பில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி பெருகி வருவதன் காரணம் என்ன ?

 


 

 மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இரண்டு வௌ;வேறு சம்பவங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பினை கொண்டு சென்ற மூவரை வவுணதீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 55ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு
பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சமரசிங்க தெரிவித்தார்.
சின்ன காலபோட்டமடு பகுதியில் இருந்து ஆரையம்பதிக்கு, முச்சக்கரவண்டியில் 22ஆயிரத்து 500 மில்லிலீட்டர்
கசிப்பினை கொள்கலனில் மறைத்து கடத்திச் சென்;ற ஒருவரும்,களிமடு – முருங்கையடி பகுதியில்
இருந்து மோட்டார் சைக்கிளில் 33 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பினை விற்பனைக்காக எடுத்துச் சென்ற
இருவரும் உள்ளடங்கலாக மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.