யுவதி ஒருவரை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்த முயற்சித்த இருவருக்கு அபராதம்

 


கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் யுவதி ஒருவரை விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்த முயற்சித்த இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா ஆறு இலட்சத்து 50,000 ரூபா அபராதம் விதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சிறுமிக்கு மூன்று இலட்சத்து 50,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.