மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள , கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தினுள்
நுழைந்த காட்டுயானை, அங்கிருந்த பயிர்களை அழித்து துவம்சம் செய்துள்ளது.
மரவள்ளி, வற்றாளை, பயற்றை போன்ற பயிர்களை அழித்து சேதப்படுத்தியுள்ளதாக கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர்
பிரியதர்சினி அசோக்குமார் தெரிவித்தார்.
வங்கி காவலாளி மற்றும் வங்கி ஊழியர்களால் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டமே இவ்வாறு காட்டுயானையினால் சேதப்படுத்தப்படுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.