மட்டக்குளி சாகர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சுற்றுலா வந்த நிலையில் ஹலவத்தை விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக ஹலவத்தை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற 23 வயதுடைய மாணவரே காணாமல் போயுள்ளார்.