சேதனப்பசளை உபயோகித்து விளைவிக்கப்பட்ட வேளாண்மை அறுவடை விழா திமிலதீவு மட்டக்களப்பு.

 

 

























 அரசின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, பெரேரா பிளான்ட் மேட் உர நிறுவனம், அரசாங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் சேதனைப் பசளை விவசாயத் திட்டத்தின் கீழ்,
நெற் செய்கையை முன்னெடுத்தது.
முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதனை பசளையின் கீழ் விளைந்த வேளாண்மையின் நெல் அறுவடை விழா 
மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி விவசாய போதனாசிரியர் பிரிவின் திமிலை தீவு கிராம சேவையாளர் பிரிவில் சிவலிங்கம் ஸ்ரீதரனுக்குச் சொந்தமான வயல் நிலத்தில் சேதன பசளை
நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சமய வழிபாடுகளுடன் சுப வேளையில் இடம் பெற்ற அறுவடை நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் வி. பேரின்பராஜா,
தேசிய உர செயலக மாவட்ட உதவி பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜூன், பெரேரா பிளான்ட் மேட் உர நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் சுரங்க டீ சில்வா, மண் முனை வடக்கு கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன்
உட்பட அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.