சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயன்ற மூன்று சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்.

 


கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மூன்று பேர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்க முயற்சித்துள்ளனர். 

இது தொடர்பில் முழங்காவில் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த மூவரையும் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.