மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளைவீதி மரப்பாலம் பகுதியில்
உயிரிழந்த நிலையில்; காட்டு யானையொன்று நேற்று வெள்ளிக்கிழமை (3)
மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள
விவசாய காணி ஒன்றில் யானையின் சடலம் இருப்பதை அவதானித்த காணியின்
உரிமையாளர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசார் வனஜீவராசிகள்
திணைக்களம் அறித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வனஜீவராசி அதிகாரிகள் சென்று
யானை இறந்தமைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.