முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம்!!

 


 
யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் முன்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பதில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 209 முன்பள்ளி பாடசாலைகளின் சிறார்களுக்கு போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்காக யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் போது முன்பள்ளி சிறார்களுக்கு உணவு வழங்கலின் போது எற்படும் சவால்கள் மற்றும் உணவின் தரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ஜே கணேஷமூர்த்தி, யுனிசெப் நிறுவனத்தின் கல்வி அதிகாரி சசிகலா, பிரதம வெளிக்கள உத்தியோகத்தர் நிபாள் அலாவுதீன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், துறை சார் நிபுணர்கள் , மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.