அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை ஆட்சேபித்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் திரளும் பொது மக்களைத் தடுப்பதற்காக, நியாயமான காரணமின்றி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியதன் ஊடாக நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.