இலங்கையில் பெட்ரோலின் விலையை மேலும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், சிறிய அளவிலான அதிகரிப்பே மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது எரிபொருள் விநியோகத்துக்காக நடைமுறைப்படுத்தப்படும் இலத்திரனியல் குறியீட்டு முறைமை எதிர்காலத்தில் நீக்கப்படுவதுடன், பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எரிபொருள் விலை 10 முதல் 15 ரூபா வரையில் அதிகரிக்கப்படுமெனவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் - ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகள் காரணமாக, எரிபொருளின் விலை தொடர்பில் தீர்மானம் மிக்க முடிவுகளை மேற்கொள்ளமுடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களில் இலத்திரனியல் குறியீட்டு முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்படும் எனவும் அதன் பின்னர் வழமை போன்று மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.