தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் .

 


 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சாதக, பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில்,பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்தப்பிக்குகள்  கூட்டாக அறிவித்துள்ளனர்.

தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்த பிக்குகள் உட்பட சர்வமத தலைவர்கள், பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் இதனை அறிவித்துள்ளனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்தப் பிக்குகளின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.