(கனகராசா சரவணன்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை கலைமகள் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று புதன்கிழமை (22) வீட்டுக்கு அத்திவாரம் தோண்டும்போது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நேரக்கணிப்பு குண்டு ஒன்று வெளிவந்த நிலையில் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
குறித்த நிலப்பரப்பில் வீடுகட்டுவதற்காக அத்திவாரத்துக்கு நிலத்தை தோண்டும் போது பொலித்தீன் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பாசல் ஒன்று வெளிவந்த நிலையில் பொலிசார் விசேட அதிரடிப்படை குண்டு செயல் இழக்கும் பிரிவினர் நேரக் கணிப்புகுண்டை மீட்டனர்
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை நீதிமன்ற உத்தரவை பெற்று அதனை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்