இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 


வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக கூறி பணம் வைப்பிலிடுமாறு கோரினால் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு கோருவது மோசடியாக இருக்கக் கூடும் எனவும், முறையான ஆய்வுகள் இன்றி பணத்தை வைப்புச் செய்வதை தவிர்க்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இதேவேளை, நீங்கள் இவ்வாறான மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது இவ்வாறான மோசடி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவிக்குமாறு நிதிப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே பணம் வைப்பிட்டிருந்தால் அந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்துள்ளதா என ஆராயுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.