மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் மாபெரும் சிரமதானப் பணி நேற்று இடம் பெற்றது.

 


 

 மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள, மண்டபத்தடி பிரதேச வைத்தியசாலை
வளாகத்தில் மாபெரும் சிரமதானப் பணி நேற்று இடம் பெற்றது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வைத்தியர் பிரதீப் சிந்தக்கவின் கோரிக்கைக்கு அமைவாக,
புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் நடராசா ஜெயசீலன் தலைமையில்
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
சிரமதானத்தின் போது சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை,
வைத்தியர் பிரதீப் சிந்தக்க, சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெக்குமார் மற்றும் சமுர்த்தி
வெளிக்கள உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மீள் எழுச்சி திட்ட வாழ்வாதார அபிவிருத்தி நிலைய வளாகமும் சிரமதானம் செய்யப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.