ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளை நூற்றாண்டு நோக்கிய தனது ஆன்மீகமும் ,சமூக சேவையும் என்னும் சுவாமி விபுலானந்தரின் அடியொட்டிய பயணத்தில் கடந்த 96- வருடங்களாக பெரும் பங்கினை ஆற்றி வருகிறது .
ராமகிருஷ்ண மிஷன் தனது சேவை பணியினை விரிவு படுத்தும் அடுத்த கட்ட நிகழ்வாக ஈழ தேசத்தின் செழுமை மிக்க நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகல பிரதேசத்தில் மலையக மக்களின் மேம்பட்டு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் புதிய நலன் புரி நிலையம் ஒன்றை உருவாக்க தீர்மானித்துள்ளது .அதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை காலை 9- மணிக்கு கொட்டகல ஹரிங்டன் (B) தோட்டம் ஸ்ரீ மாரி அம்மன் கோவில் அருகில் நடை பெற்றது .