ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையில் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையின் (அ) மற்றும் (ஆ) உப பிரிவுகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, அக்கிராசனத்தை ஏற்று அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.