மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக பணியாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

 


மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்துள்ளதாக வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால், பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவியை வைத்திருப்பது நன்மை பயக்கும் என்ற காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதையடுத்து, தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உத்தியோகபூர்வமற்ற முறையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமராக பணியாற்றுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த கோரிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.