அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை .

 


அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று வாராந்திர அமைச்சரவை மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார். 

 மேலும் கூறுகையில்,“அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.