மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம்
பகுதியில், நேற்று மாலை மரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக
வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப
வறுமை நிலைமை காரணமாக மரம் ஏறி தொழில்செய்துவரும் குறித்த பகுதியை
சேர்ந்த, 41 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ,ஆறுமுகம்-குவேந்திரன் என்பவரே
உயிரிழந்துள்ளார்.
வேப்ப மரத்தில் ஏறி மரக்கிளைகளை வெட்டும் போதே, தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின்
போது வீட்டு உரிமையாளர், முச்சக்கரவண்டியின் உதவியுடன் களுவாஞ்சிகுடி ஆதார
வைத்தியசாலைக்கு மரத்திலிருந்து வீழ்ந்தவரைக் கொண்டுசென்றபோதும்,
அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.