மட்டக்களப்பு-கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கால்பந்து போட்டி.











கடல்மீன்கள் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகக் குழு 26.02.2023  ஞாயிற்றுக்கிழமை அன்று கடல்மீன்கள் விளையாட்டு மைதானத்தில் தங்கள் உறுப்பினர்களுடன் கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்திருந்தது  நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  நடை பெற்ற  பாரிய போட்டியாக இது அமைந்திருந்தது.
  விளையாட்டு மைதானத்தில் போட்டியை பார்வையிட  கடல்மீன்கள் கழக உறுப்பினர்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட வந்திருந்தனர் . இந்தப் போட்டியில் கடல்மீன்களின் 10 அணிகள் பங்கு பற்றி இருந்தன . ஒவ்வொரு அணியிலும் 08 வீரர்கள் கலந்து கொண்டனர். டிலு  அணிக்கும் சுமன் அணிக்கும் இடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுமன் அணி வெற்றி பெற்று போட்டியின் சம்பியனாகியது.