மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் சிறுதொழில் மற்றும் உணவு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சுவையானதும் தரமானதுமான உணவுகளை பெறுவதற்கான சந்தர்ப்பமாக ஹங்ரி
பிலாஸ்ட் எனும் தொனிப் பொருளில் இந்த விற்பனை நிகழ்வு நடாத்தப்பட்டது.
உணவு
பாதுகாப்பு, போசாக்கான உணவு உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பு,
மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியின் கீழ் இவ்
விற்பனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்,பிரதம கணக்காளர், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து உற்பத்தியாளர்களை ஊக்குவித்தனர்.