மட்டக்களப்பு சவுக்கடி பிரதேசத்தில் தனவந்தர்கள் காணி அபகரிப்பு செய்வதாக பொதுமக்கள் விசனம் .

 


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் ,பொதுமக்கள் அரசகாணிகளில் அத்துமீறிகுடியேற முற்பட்ட நிலையில் அதிகாரிகள் மற்றும் பொலிஸாhரிடம் முறுகல் நிலையேற்பட்டுள்ளது.
சவுக்கடி-மைலம்பாவெளி ஆகியவற்றின் எல்லைப்பகுதியாகவுள்ள குறித்த பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக காணிக்கான கோரிக்கையினை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் வேறு இடங்களை சேர்ந்த தனவந்தர்களினால் அப்பகுதி காணிகள் அபகரிக்கப்படும். நிலையில் அவற்றினை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் பொலிஸாரோ பிரதேச செயலகமோ முன்னெடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

காணியற்ற தாங்கள்ஒரு 10பேர்ச் காணியை பிடிக்கும்போது வந்து தடுக்கும் பொலிஸாரும் கிராம சேவையாளரும் , நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை தனவந்தர்கள் பிடிக்கும்போது யாரும் அப்பகுதிக்கு வருவதில்லையெனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக அரசியல் பின்னணியில் குறித்த பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும,; பொதுமக்களை குடியேறவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும்; அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதன்போது தெரிவித்தார்.